சத்தியமங்கலம் ஆக 21:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கொத்தமங்கலம், தாண்டாம்பாளையம், பவானிசாகர் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள முக்கிய நகங்களுக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

சில குறிப்பிட்ட காலங்களில் துபாய் மற்றும் அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி ஆகின்றது. இன்று மொகரம், வரலட்சுமி விரதம், பிரதோஷம் மற்றும் சுப முகூர்த்த தினம் என்பதால், சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து இன்று காலை மல்லிகைப்பூ கிலோ 1,890 ரூபாய்க்கு விற்பனையானது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வாரம் முன்பு வரை 875 ரூபாய் முதல் வரை விற்பனையான நிலையில், இன்று அதிரடியாக 2,000 ரூபாயை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டின் இன்றைய விலை நிலவரப்படி மல்லிகைப்பூ 1,890 ரூபாய்க்கும், முல்லை 620, காக்கடான் 775, ஜாதி மல்லி 800 ரூபாய்க்கும் விற்பனையானது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today