ஈரோடு ஜன 1:

மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் ஜனவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் இந்திராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு.

ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர குறைதீர் கூட்டம் ஜனவரி 5ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

ஈரோடு, ஈ.வி.என். ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் ஈரோடு நகர் முழுவதும் மற்றும் கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன் சத்திரம், சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு,கவுந்தப்பாடி பகுதிகளைச் சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் மேற்பார்வைப் பொறியாளரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.tnebltd.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today