ஈரோடு, ஆக 6:
ஈரோட்டில், ஆடி அமாவாசையன்று கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யவும், அணைக்கட்டு மற்றும் ஆறுகளில் நீராடவும் தடை விதிக்கப்படுகிறது என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஆடி அமாவாசையான வருகிற 8ம் தேதி கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், அணைக்கட்டுகள் மற்றும் ஆறுகளில் நீராடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
தடை விதிக்கப்பட்டுள்ள கோயில்கள் மற்றும் அணைக்கட்டுகள் விபரம்: பண்ணாரி அம்மன் கோயில், பவானி சங்கமேஸ்வரர் கோயில், சென்னிமலை சுப்ரமணியசுவாமி கோயில், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில், தலையநல்லூர் பொன்காளியம்மன் கோயில், சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோயில், கோபி பச்சைமலை சுப்ரமணியசுவாமி கோயில், பவளமலை முத்துக்குமாரசுவாமி கோயில், நஞ்சை காளமங்கலம் மத்யபுரீஸ்வரர் கல்யாண வரதராஜப்பெருமாள் கோயில், நாகேஸ்வரர் குலவிளக்கம்மன் கோயில், வைராபாளையம் சோழீஸ்வரர் கோயில், காஞ்சிக்கோவில் சீதேவியம்மன் கோயில், நசியனூர் மதுரகாளியம்மன் கோயில், திருவாச்சி கரியபெருமாள் கோயில், திண்டல் வேலாயுதசாமி கோயில், பெருந்துறை செல்லாண்டியம்மன் கோயில், அம்மாபேட்டை சொக்கநாதசுவாமி கோயில், காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோயில், பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில், கருங்கல்பாளையம் சோழீஸ்வரர் கோயில், ஈரோடு பெரியமாரியம்மன் கோயிலில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுபோல காலிங்கராயன் அணைக்கட்டு, காரணம்பாளையம் அணைக்கட்டு, கொடிவேரி அணைக்கட்டு, பவானிசாகர் அணை ஆகிய பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today