ஈரோடு டிச 2:

தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆலோசனையின் பேரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஈரோடு வீட்டு வசதி பிரிவு மூலம் விற்பனை செய்யப்படும் வீடு மற்றும் வீட்டு மனைகள் வாங்கியவர்களுக்கு கிரைய பத்திரம் வழங்குவதற்கான முகாம் கடந்த 26ம் தேதி, 29ம் தேதி மற்றும் 30ம் தேதி ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். வீடு, வீட்டு மனைகள் ஒதுக்கீடு பெற்று, அதற்கான முழு தொகையையும் செலுத்தியவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் வழிகாட்டினர்.

இவ்வாறு முழுத்தொகை செலுத்தி உரிய ஆவணங்கள் வழங்கிய 25 பேருக்கு கிரை பத்திரங்கள் வழங்கப்பட்டன.இந்த முகாமுக்கு ஈரோடு வீட்டு வசதி வாரிய அலுவலக செயற்பொறியாளரும் நிர்வாக அதிகாரியுமான கரிகாலன் தலைமை தாங்கி, கிரைய பத்திரங்கள் வழங்கினார். முகாமில் கண்காணிப்பாளர் பிரபாவதி, உதவி வருவாய் அதிகாரி (பொறுப்பு) ஜெ.பிரியா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். https://www.tnhb.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/