சத்தியமங்கலம் ஆக 10:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி, நெய்தாளபுரம் பகுதியில் புலி ஒன்று விவசாய நிலத்தில் நடமாடுவது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கேட்டபொழுது, ‘புலி நடமாடும் காட்சி, தாளவாடி எனவும், கடம்பூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி எனவும், சமூக வலை தளங்களில் பொதுமக்கள் பரவி வருகின்றனர். இதுகுறித்து உண்மைத் தகவல் கிடைத்தால் மட்டுமே விசாரணை மேற்கொள்ள முடியுமென’ வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இப்பகுதியில் உள்ளவர்கள் சற்று பதட்டம் அடைந்துள்ளனர்

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today