ஈரோடு ஆக 6:

ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் வருகிற 12ம் தேதி மதியம் 2 மணியளவில், பி.எல்.ஐ., ஆர்.பி.எல்.ஐ., நேரடி ஏஜென்ட் தேர்விற்கான நேர்காணல் நடைபெற உள்ளது.  ஆர்வம் உள்ளவர்கள் முதுநிலை கண்காணிப்பாளர், ஈரோடு கோட்ட அலுவலகத்தில் வயது சான்றிதழ் மற்றும் முழு விபரங்களுடன் கலந்து கொள்ளலாம்.10, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18- முதல் 65 வயது ஆகும். ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சுய தொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் உள்ளிட்டோரும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 0424-2258966 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு கோட்ட முநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today