ஈரோடு டிச 25:

கரும்பில் இடைக்கணு துளைப்பான் தாக்குதல் காரணமாக மகசூல் குறையும் அபாயம் உள்ளதாக வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாளவாடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் வேளாண்மை உதவி இயக்குனர் மகாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தாளவாடி வட்டாரத்தில் கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கரும்பில் இடைக்கணுத் துளைப்பான் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் மகசூல் இழப்பு மற்றும் சர்க்கரையின் தரம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பாதிப்பு உள்ள கரும்பின் கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதியில் புழுக்கள் நுழைந்து சென்று திசுப்பகுதியை தின்று அழிக்கும்.

கரும்பின் கணுவிடைப்பகுதி சிறியதாக சுருங்கி காணப்படுவதோடு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதை கட்டுப்படுத்த கரும்பு சோகை உரித்து அதனை மண்ணில் பரப்பில் புதைத்துவிட வேண்டும். புழுக்களின் முட்டையை சேகரித்து அழிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்கல் கரும்பில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.agritech.tnau.ac.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today