ஈரோடு நவ 1:

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டம், வெளிமாநிலங்களை சேர்ந்த கல்லூரி மாணவ-, மாணவிகள் படித்து வருகின்றனர். அதேபோல், ஏராளமான மக்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

தீபாவளிக்கு பண்டிகை வரும் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால், கூட்ட நெரிசலை தவிர்க்க சிலர் பண்டிகைக்கு முன்னதாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கி உள்ளனர். பெரும்பாலனோர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும்போது, ஈரோட்டில் இருந்தே அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான இனிப்பு, புத்தாடை போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே இருப்பதால், பயணிகள் ரெயிலில் பட்டாசுகளை கொண்டு செல்கின்றனரா? என ஈரோடு ரெயில்வே போலீசார், நுழைவு வாயில் வழியாக வரும் பயணிகளின் உடமைகளை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர். மேலும், ரெயிலில் பட்டாசு போன்றவற்றை கொண்டு செல்லக்கூடாது எனவும் மக்களிடம் அறிவுறுத்தினா். இதேபோல், திருட்டு போன்ற அசாம்பாவித சம்பவங்களை தடுக்க ரயில் பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரெயில்வே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். https://www.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/