ஈரோடு ஜன 1:

ஈரோடு ரெயில் நிலையத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. தினமும் வடமாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு ரெயில் நிலையத்திற்கு  ரெயில்களையும், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில்  புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை ஈரோடு ரெயில்வே  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரான் தலைமையில் போலீசார்  தீவிர சோதனை செய்தனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் உடமைகளை சோதனை செய்தனர். மேலும் ரெயிலில் வந்த பயணிகள் உடமைகளையும் சோதனை செய்த பிறகே வெளியே அனுமதித்தனர். https://www.indianrailways.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today