ஈரோடு ஆக 13:
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என்பதால் இந்தியா முழுவதும் போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தி மக்கள் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணித்து நடந்து வருகின்றனர். தமிழகத்திலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று ரயில்வே இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், முருகானந்தம் மேற்பார்வையில் போலீசார் பயணிகளின் உடமைகளை தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர்.வெளி மாநிலத்தவர்கள் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனை செய்தனர்.
இதேபோல் ஈரோடு ரெயில் நிலையம் முழுவதும் உள்ள நடைமேடைகளில் போலீசார் ஒவ்வொரு இடமாக அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில்கள் அனைத்திலும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். ரெயிலில் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை செய்தனர். சந்தேகப்படும்படியான பொருட்கள் ரெயில் நிலையத்தில் இருந்தால் அது குறித்து தகவல் தெரிவிக்குமாறும் போலீசார் பயணிகளிடம் அறிவுறுத்தினர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today