ஈரோடு டிச 30:
கோபி வருவாய் கோட்டத்தை பிரித்து புதிய வருவாய்க் கோட்டம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்றோர் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று கூடலிங்கம் திடலில் நடைபெற்றது.
இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஆர்.குருராகவேந்திரன், துணைத் தலைவர்களாக ந.கவிதா, ஆர்.தினகரன், எம்.ஆர்.ரஜிக்குமார், த.ஜெகனாதன், மாவட்டச் செயலாளராக எம்.மாசிலாமணி, இணைச் செயலாளர்களாக எஸ்.கதிர்வேல், மோ.பிரவீன்குமார், செ.ரமேஷ், மு.ராஜிவ் காந்தி, மாவட்டப் பொருளாளராக த.விஜய் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
மாவட்ட மகளிர் குழு அமைப்பாளராக பரிமளா தேவி தேர்தெடுக்கப்பட்டார். இக்கூட்டத்தில், கோபி வருவாய்க் கோட்டத்தில் உள்ள 6 வட்டங்களை நிர்வாக வசதிக்காக இரண்டு கோட்டங்களாகப் பிரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.குமரேசன், பொதுச் செயலாளர் எம்.பி.முருகையன், மாநிலப் பொருளாளர் வெ.சோம சுந்தரம், முன்னாள் நிர்வாகிகள், க.ராஜ்குமார், எம்.அண்ணாதுரை, பொ.ஆறுமுகம், வெ.பன்னீர் செல்வம், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர், விஜய மனோகரன், துணை பொதுச் செயலாளர் மு.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://www.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today