ஈரோடு அக் 30:
ஈரோடு ஓட்டல் ஐஸ்வர்யாவில் ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் தூய்மை பணியாளர்களின் வாரிசுகளுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடந்தது.
சத்தியமங்கலம் ரீடு தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்கருணாகரன் வரவேற்றார். இயக்குனர் கருப்புசாமி பயிற்சி குறித்து பேசினார். ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக மாவட்ட மேலாளர் ஜெயந்தி பேசியது, இடைத்தரகர்கள் மூலம் பயனாளிகள் ஏமாற்றப்படுவதை தவிர்க்கும் வகையில், அனைத்து வகையான விண்ணப்பங்களையும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி மாற்றி உள்ளனர்.
எளிமையாக விண்ணப்பம் தீர்வு செய்யப்படுகிறது. தூய்மை பணியாளர்களின் நலவாரிய அட்டை விண்ணப்பிக்கும் முறையும், எளிமையாக்கப்பட்டுள்ளது. அதனையும் பயன்படுத்தி கொள்ளவேண்டும். இந்நலவாரிய அட்டை பெறுவதன் மூலம், நிரந்தர, தற்காலிக துாய்மைப்பணியாளர்கள் திருமணம், இறப்பு, மேற்படிப்புக்கான அரசின் நிதியுதவி பெற முடிகிறது. இவ்வாறு பேசினார்.
மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் பாஸ்கர் பேசியது, நடப்பாண்டில் 50 விண்ணப்பங்கள் மகளிர் திட்டம் மூலம் அருந்ததியர் சமூகத்தினர் தாட்கோ கடனுதவி பெற அனுப்பி உள்ளோம். இதன் மூலம் பலருக்கு சிறந்த வாய்ப்பு உருவாகும், என்றார்.
ஈரோடு மாவட்ட தொழில் மைய மேலாளர் திருமுருகன் பேசியது, ஆண்டுக்கு 440 பேர் சுய தொழில் துவங்க உதவுகிறோம். கிராமம், நகரம், மலைவாழ் மக்கள் என்ற ஏற்றதாழ்வு இன்றி, ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கி, திட்ட பயன்களை வழங்குவதால், அனைத்து தரப்பு மக்களும் தாங்களே முன்வந்து பயன் பெற வேண்டும், என்றார்.சமூக ஆர்வலர்கள் பொன்னுசாமி, சிந்தனைசெல்வன், வீரவேந்தன், பொன்தம்பிராஜ் உட்பட பலர் பேசினர்.களப்பணியாளர் பிரேமா நன்றி கூறினார். https://www.erode.nic.in