ஈரோடு சூலை 3:

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சார்பில், காய்கறி மார்க்கெட்டில் அனைத்து வகையான சுங்க வரி வசூல் செய்வதற்கான கட்டணம், புகார் தெரிவித்தல் போன்ற விபரங்களுடன் கூடிய பட்டியல் வைக்க கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

வியாபாரிகள் வழங்கிய மனுவில் கூறியதாவது: ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகளாக உள்ளதுடன், மார்க்கெட்டில் சங்க உறுப்பிரனாகவும் உள்ளோம். கொரோனாவால் வ.உ.சி, பூங்கா மைதானத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. மார்க்கெட் வரும் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள், மளிகை கடை வியாபாரிகள், உள்ளூர், வெளியூர் வாகனங்கள், காய்கறி மூட்டைக்கும் மாநகராட்சி நிர்ணயித்த தொகை விபரத்துடன் கூடிய ரசீது வழங்குவதில்லை.

குத்தகைதாரர் தரப்பில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். வியாபாரிகளுக்கு புரியும்படி சுங்க வரி வசூல் செய்யும் விபர பலகையை வைக்க வேண்டும். வரி வசூல் விபரம், புகார் செய்ய வேண்டிய முகவரி, அலுவலர் பெயருடன் போன் எண் போன்ற விபரத்துடன் பலகையை மார்க்கெட்டின் நான்கு நுழைவு வழிகளிலும் வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கேட்டு கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே