ஈரோடு சூலை 5:

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவு நாளை அரசு சார்பில் அனுசரிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 216வது நினைவு நாள் வருகின்ற ஆடி 1ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. பொல்லான் சுட்டுக்கொல்லப்பட்ட இடமான அரச்சலூர் அடுத்துள்ள நல்லமங்காபாளையத்தில் அரசு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும்.

அனைத்து கட்சி, சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த அனுமதிக்க கோரி, மாவீரன் பொல்லான் பேரவை மாநில தலைவர் வடிவேல்ராமன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

தமிழ்புலிகள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் கட்சி, தலித் விடுதலை இயக்கம், திராவிடர் பேரவை, திராவிடர் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today