ஈரோடு சூலை 20:

தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளதாக ஈரோடு மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க கவுன்சிலர் செயலாளர் கோபால் தெரிவித்தார். அவரது செய்திக்குறிப்பில் கூறியதாவது: தமிழகத்தில் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், விபத்தில் மரணம் அடைந்தால் ஒரு லட்சம் ரூபாய், கட்டுமான தொழிலாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் ஐந்து லட்சம் ரூபாய்,அவருடைய குழந்தைகளுக்கு திருமண உதவித்தொகையாக ஆண்களுக்கு 3 ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அரசு வழங்கும். மாவட்டத்தில் உள்ள அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து பயன் அடையலாம். ஈரோடு மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்திலும், அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்திலும் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today