ஈரோடு சூலை 16:

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது கடந்த 3 நாட்களாக நீர் பிடிப்பு பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ‌2 நாட்களுக்கு முன் அணைக்கு வரும் நீர்வரத்து 1079 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது இன்று மாலை 4 மணி நிலவரப்படி 6,875 கன அடி அதிகரித்துள்ளது அணையின் நீர்மட்டம் ‌94.98 அடியாகவும்நீர் இருப்பு 24.97 டி.எம்.சி., ஆகவும் ஆகவும் உள்ளது. அணையின் நீர் வெளியேற்றம் ஆற்றில் குடிநீருக்காக 100 கனஅடியும் அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்காக 500 கனஅடியும் மொத்தம் 600 வெளியேற்றப்படுகிறது.நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today