பவானிசாகர் சூலை 17:

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்ட மலைப்பகுதி, வட கேரளா பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்கு கனமழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வனப்பகுதி வழியாக வரும் நீர், மாயாறு, பவானி ஆற்றின் வழியாக அணையை அடைகிறது. நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 661 கனஅடி நீர் அணைக்கு வரத்தாகி, நேற்று மாலை 6 ஆயிரத்து 875 கனஅடியாக உயர்ந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 95 அடியை தொட்டது. அணையின் நீர் இருப்பும் 25 டி.எம்.சி.,யானது. நேற்று மாலை 4 மணிக்கு அணைக்கு 3 ஆயிரத்து 586 கனஅடி நீர் வரத்தாகி அணையின் நீர் மட்டம் 95.40 கனஅடியாக உயர்ந்தது. அணையில் இருந்து 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்றும் மாலையில் ஈரோடு மற்றும் திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மழை பதிவானது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today