ஈரோடு டிச 31:

ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மாட்டு சந்தை கூடுவது வழக்கம். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மாற்றம் கொண்டு வருவது வழக்கம்.

இதேபோல் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகள் வாங்கிப் செல்வதும் வழக்கம். இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு காரணங்களால் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதேபோல் சந்தையில் மாடுகள் வரத்தும் குறைந்தது. அதனால் வியாபாரமும் மந்தமாகவே நடந்து வந்தது.

இந்நிலையில் இன்று கூடிய சந்தையிலும் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. எனினும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த கூடிய மாட்டுச்சந்தையில் பசு- 350, எருமை 200, கன்று 50 என மொத்தம் 600 மாடுகள் வரத்தாகி இருந்தன. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்ததால் மாடுகள் விறுவிறுப்பாக இருந்தது. இன்று 90 சதவீதம் மாடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். https://www.ncbi.nlm.nih.gov

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today