கோபிசெட்டிபாளையம் நவ 23:
கோபிசெட்டிபாளையம் சரகம் பனங்காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் வழங்குவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் களப்பணி ஆய்வு, முகாம் நடந்தது.
கோபிசெட்டிபாளையம் சரக துணை பதிவாளர் ப.கந்தராஜா தலைமையிலான குழுவினர், விவசாயிகளை நேரடியாக சந்தித்து பயிர் கடன் பெறுவது தொடர்பாகவும், விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து, அதனை சரி செய்வது தொடர்பாக களஆய்வு செய்தனர். அத்துடன் பனங்காட்டூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 35 லட்சம் ரூபாய்க்கு பயிர் கடன் வழங்கப்பட்டது. https://www.tnagrisnetn.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/