ஈரோடு ஆக 19:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஜூன் இறுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102-ஐ தாண்டியது. ஈரோடு மாவட்டத்திலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102 -ஐ தாண்டியது. இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வரியில் குறைத்துள்ளது.

இதனால் ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.99.94 என குறைந்தது.ஈரோட்டில் நேற்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.94-க்கு விற்பனை செய்யப்பட்டது.ஆனால் டீசல் விலையை அரசு குறைக்கவில்லை. ஈரோட்டில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.88 ஆக இருந்தது. நேற்று 19 பைசா குறைந்தது ரூ.94.69-க்கு விற்கப்பட்டது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today