ஈரோடு சூலை 23:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய கட்டுமான துறையின் பல்வேறு பிரிவு தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து, சி.என்.ஐ., என்ற புதிய அமைப்பு ஈரோட்டில் துவங்கப்பட்டது. சி.என்.ஐ., அமைப்பு நிறுவனர் உதயகுமார் தலைமை வகித்து புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஈரோடு மாவட்ட முதன்மை நிர்வாகி வெங்கடேஸ்வரன், செயலாளர் உமா சிவம், உறுப்பினர் மேம்பாட்டு தலைவர் கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றனர். நிறுவனர் உதயகுமார் கூறியதாவது:கட்டுமான துறையில் செங்கல், டைல்ஸ் விற்பனையாளர்கள், பொறியாளர்கள், எலக்ட்ரிக் அமைப்பாளர் என, 130 வகை தொழில்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து ஒருவருக்கு ஒருவர் வர்த்தக பரிந்துரை செய்யும் அமைப்பாக சி.என்.ஐ., செயல்படும். கடந்த ஓராண்டில், தமிழகத்தில், 11 மாவட்டங்களில் இந்த அமைப்பு துவங்கப்பட்டு, நுாற்றுக்கணக்கானோர் இணைந்து, கோடிக்கணக்கான ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.
தமிழகத்தின், 12வது மாவட்டமாக ஈரோட்டில் இந்த அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. 50 பேர் உறுப்பினராக இணைந்துள்ளனர், என்றார். ஈரோடு மாவட்ட சிவில் இன்ஜினியர்கள் சங்க தலைவர் சண்முககணபதி, எஸ்.கே.குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், சென்னை அமைப்பின் கோவை மண்டல பொறுப்பாளர் லிங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today