ஈரோடு ஜன 1:
இன்று புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.புத்தாண்டை வரவேற்க மக்களும் தயாராகி வருகின்றனர். இது ஒரு புறமிருக்க கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. தமிழகத்திலும் இதன் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொதுமக்கள் வெளியே வந்து புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என்றும், வீட்டிலேயே வைத்து புத்தாண்டை கொண்டாட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சுற்றறிக்கையும் அனுப்பப்பட்ட அனுப்பப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் புத்தாண்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 800- க்கும் மேற்பட்ட போலீசார் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் மாநகர் பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மாநகரில் முக்கிய பகுதிகளான ஈரோடு பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், ரெயில் நிலையம், காளை மாட்டு சிலை, பன்னீர்செல்வம் பார்க், கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், ஜி.எச்.ரவுண்டானா பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்த குமார் கூறும்போது, புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படும். மாணவரின் முக்கியமான சாலைகளில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள மேம்பாலம் இன்று இரவு முதல் நாளை காலை வரை மூடப்பட்டிருக்கும். மேம்பாலத்திற்கு செல்ல இரவு முதல் நாளை காலை வரை வாகன ஓட்டிகளுக்கு அனுமதி இல்லை. புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் தெருக்களில் கேக் வெட்டி கொண்டாட கூடாது. அவர் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வழிபாட்டு தலங்களில் சென்று வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் கோயில்களுக்கு செல்லும் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி முககவசம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். https://www.tnhealth.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today