ஈரோடு டிச 23:

ஈரோட்டில் நெல் கொள்முதல் மையங்களை திறந்து வைத்து அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: ஈரோட்டில் அரசின் நெல் கொள்முதல் மையம் 2 இடங்களில் முதற்கட்டமாக துவங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தேவை ஏற்பட்டால் கூடுதலாக கொள்முதல் மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு தனியார் கொள்முதல் விலையை விட, அரசு கொள்முதல் மையத்தில் ரூ.5 கூடுதலாக கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது தனியார் கொள்முதல் மையத்தில் ரூ.15க்கு கொள்முதல் செய்கிறார்கள்.

நாம், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்காக 20 ரூபாய் 60 காசுகளுக்கு கொள்முதல் செய்கிறோம். இங்கு, விவசாயிகள் எவ்வளவு நெல் கொண்டு வந்தாலும் பெற்றுக் கொள்ளப்படும். கடந்த ஆண்டுகளில் நெல் கொள்முதல் மையங்களில் நடந்த முறைகேடுகள் களையப்பட்டுள்ளன.

ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் பொட்டாஷ் உர தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பொட்டாஷ் உரம் வரவழைக்கப்பட்டு, அனைத்து உர விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அதற்கான தேதி  விரைவில் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today