ஈரோடு நவ 13:

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில தலைவர் செந்தாமலர், பொது செயலாளர் உஷாராணி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியதாவது:

வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலித்தும் போது பல்வேறு இன்னல்களை கிராம சுகாதார செவிலியர்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது, தடுப்பூசி மருந்துகள் வைத்துள்ள பெட்டியை அடிக்கடி திறந்து மூடுவதால் அதன் தரம் குறைய வாய்ப்புள்ளது.

வழக்கம் போல அரசு மருத்துவமனைகளில் எப்போது வேண்டுமானாலும் விருப்பம் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று அரசு அறிவிக்க வேண்டும். தற்போது மழை காலம் என்பதால் பல்வேறு நோய்கள் பரவி வருகிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி என கிராம சுகாதார செவிலியர்கள் பணிச்சுமையால் தவித்து வருகின்றனர்.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பாதுகாப்பு பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு, இருளர் சமுதாய பெண்ணின் கோரிக்கை நிறைவேற்றம் என பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வரும் தமிழ்நாடு முதல்வர், கிராம சுகாதார செவிலியர்களின் கோரிக்கையினை கனிவோடு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.tnhealth.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/