ஈரோடு நவ 15:

ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சியின் கீழ் இல்லம் தேடி கல்வி திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே முதல்கட்ட பயிற்சி முடிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக நேற்று ஈரோடு, சென்னிமலை, பெருந்துறை, மொடக்குறிச்சி, நம்பியூர், பவானிசாகர், டி.என்.பாளையம், கோபி, தாளவாடி உள்ளிட்ட 9 ஒன்றியங்களில் நேற்று நடைபெற்றது.

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோடு, மாநகராட்சி நடுநிலை பள்ளியில் வட்டார அளவிலான இரண்டாம் கட்ட பயிற்சியில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 70 பேர் பங்கேற்றனர். ஏற்கனவே மாவட்ட அளவில் முதல்கட்டமாக 807 பேருக்கும், இரண்டாம் கட்டமாக 627 பேர் என மொத்தம் 1434 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார். https://www.tnschools.gov.in