ஈரோடு அக் 29:
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என நான்கு இடங்களிலும் திங்கள் கிழமை முதல் வெள்ளி கிழமை வரை மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது. தீபாவளி பண்டிகை நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் நவம்பர் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு மஞ்சள் ஏல வர்த்தகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. நவம்பர் எட்டாம் தேதி மஞ்சள் வர்த்தகம் வழக்கம்போல செயல்படும் என ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். https://www.erode.nic.in,
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/