ஈரோடு டிச 10:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட தினசரி மார்க்கெட்டில் சுங்கம் வசூலிக்க கருமாண்டிசெல்லிபாளையம் தீத்தாம்பாளையம் குருவன்காடு பகுதியை சேர்ந்த சண்முகம் மனைவி புஷ்பமலர் என்பவர் ஓராண்டு குத்தகை எடுத்துள்ளார். இவர், பெருந்துறை மார்க்கெட்டில் உள்ள அனைத்து மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், விவசாயிகளிடம் அதிக சுங்க கட்டணம் வசூலித்து வருவதாக தொடர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் ஏஐடியுசி மாவட்ட தலைவர் சின்னச்சாமி இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனார். இதன்பேரில், பெருந்துறை சிறப்பு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர், குத்தகைதாரரான புஷ்பமலருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், பெருந்துறை மார்க்கெட்டில் இனி வரும் காலங்களில் மாவட்ட அரசிதழில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். வசூல் செய்யப்படும் தொகைக்கு முறையான ரசீதினை வியாபாரிகளிடம் வழங்க வேண்டும். மீறினால் மார்க்கெட்டில் சுங்க கட்டணம் வசூல் செய்யும் உரிமம் ரத்து செய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். https://www.tnurbantree.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today