ஈரோடு அக் 7:
ஈரோடு, கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மாட்டு சந்தை கூடும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதி, நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர். இங்கு வரத்தாகும் மாடுகளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்வது வழக்கம். கொரோனா தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த மாட்டு சந்தை கடந்த செப்டம்பர் 2ம் தேதி முதல் அரசு பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் உடன் செயல்பட்டு வருகிறது.இருப்பினும் வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மறந்த நிலையில் நடந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக இன்று கூடிய சந்தையில் மாடுகள் வரத்து குறைந்த காணப்பட்டன.பசு -350, எருமை -150, கன்று -50 என மொத்தம் 550 மாடுகள் வரத்தானது. கடந்த வாரத்தை காட்டிலும் 100 மாடுகள் குறைவாகவே வந்திருந்தன. இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். ஆனால் கனமழை எதிரொலியால் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. பசுமாடு ரூ.30 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை விற்பனையானது. எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை விற்பனையானது. வளர்ப்புக் கன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. இந்த வாரம் வரத்தான மாடுகள் 85 சதவீதம் விற்பனையானதாக மாட்டு சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/