மொடக்குறிச்சி சூன் 28: ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரும் 30 ம் தேதி நிலக்கடலை ஏலம் துவங்குகிறது. அது போல ஜூலை 2ம் தேதி எள் ஏலம் நடக்க உள்ளது. ஈரோடு மாவட்ட விவசாயிகள் எள் மற்றும் நிலக்கடலையை தரம் பிரித்து கொண்டு வர வேண்டும். புதன் கிழமை காலை 10 மணிக்குள் விளை பொருளை கொண்டு வந்து ஏலத்தில் வைக்க வேண்டும். அனைத்து விவசாயிகள், வியாபாரிகள் சமூக இடை வெளியுடன் அரசின் விதிமுறை களை கடை பிடித்து ஏலத்தில் பங்கேற்க வேண்டும் என ஈரோடு மாவட்ட விற்பனை குழு தலைவர் ஆர்.நடராஜன் கேட்டுக் கொண்டார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே