ஈரோடு நவ 17:

ஈரோடு மாவட்ட விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அதிகாரிகள் ஞா.சாந்தி, கு.கோகிலீஸ்வரி ஆகியோர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் மார்கழி பட்டம் (டிசம்பர்-–ஜனவரி) விதைப்புக்கு விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். இந்த பட்டத்தில் நிலக்கடலை விதைப்புக்கு தயாராகி வரும் விவசாயிகள் டி.எம்.வி.7, வி.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ.3, வி.ஆர்.ஐ. ஜிஎன் 5, வி.ஆர்.ஐ. ஜிஎன் 6, டி.எம்.வி. ஜிஎன் 13, தாரணி மற்றும் கோ 7 ஆகிய பயிர் ரகங்களை விதைப்புக்கு தேர்வு செய்யலாம்.

விதைப்புக்கு முன்பு விதை தரத்தை உறுதி செய்ய வேண்டும். விதையின் புறத்தூய்மை, முளைப்பு திறன், ஈரப்பதம் ஆகியவற்றை தெரிந்து தரமான விதைகளை தேர்வு செய்ய ஈரோடு சத்தி ரோடு, வீரபத்திரா 2-வது வீதி ஆனூர் அம்மன் கட்டிடத்தில் உள்ள விதை பரிசோதனை அலுவலகத்தை விவசாயிகள் அணுக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/