சிவகிரி டிச 30:
ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை காய் ஏலம் நடைபெற்றது. சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 22 மூட்டைகளில் 659 கிலோ எடையுள்ள நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 65 ரூபாய் 91 காசுக்கும், அதிகபட்ச விலையாக 67 ரூபாய் 72 காசுக்கும், சராசரி விலையாக 66 ரூபாய் 42 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.மொத்தமாக 43 ஆயிரத்து 955 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார். https://www.tnagrisnet.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today