ஈரோடு நவ 13:
60 ஆயிரம் ரூபாய் கடனுக்கு விவசாய நிலம் அபகரிப்பு செய்ததாக, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி புகார் மனு அளிக்க வந்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள மைக்கேல் பாளையத்தைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மனைவி பெரிய நாயகம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த பெரியநாயகம் அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியமேரி என்பவரிடம் 60 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
இதனை திருப்பி செலுத்த இயலாததால் மூதாட்டி பெரியநாயகிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 25 சென்ட் நிலத்தை தனது கணவர் பெயருக்கு பத்திர பதிவு செய்துள்ளார். இடத்தை திருப்பி கேட்டால் கொடுக்காமல் மூதாட்டியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆரோக்கியமேரி மற்றும் அவருடைய கணவர் மைக்கேல்ராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து தனது சொத்தை மீட்டுத்தருமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி பெரிய நாயகம் புகார் அளித்துள்ளார் புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். https://www.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/