ஈரோடு நவ 2:

வேளாண் இடுபொருட்களான விதைகள், பூச்சி மருந்துகள், உரங்களை வினியோகம் செய்ய 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ளன. உரம், பூச்சி மருந்து விற்பனை மையங்கள் அமைக்க விரும்புபவர்கள் வேளாண்மை சார்ந்த பயிற்சியில் கல்வித்தகுதி பெற்றிருக்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி உரம், பூச்சி மருந்து விற்பனையாளர்கள் இடுபொருள் விற்பனை மையம் தொடங்கும்போது குறைந்த பட்சம் ஒரு வருடம் வேளாண்மை பட்டய படிப்பு முடித்து இருக்கவேண்டும். ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனையாளர்களும், புதிதாக தொடங்க உள்ளவர்களும் சேர்ந்து பட்டய படிப்பை முடித்து உள்ளனர். அவர்களுக்கான பட்டயமளிப்பு விழா ஈரோடு திண்டலில் நேற்று நடந்தது. 

விழாவுக்கு ஈரோடு வேளாண்மை இணை இயக்குனர் எஸ்.சின்னுசாமி தலைமை தாங்கி பட்டய சான்றிதழ்களை வழங்கினார். இதில் 38 பேர் சான்றிதழ்கள் பெற்று கொண்டார்கள். விழாவில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். https://www.tnagrisnet.tn.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/