ஈரோடு நவ 10:
இருளர் இன மக்களுக்கு துணை நிற்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு திராவிட தமிழ் பேராசிரியர் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. திராவிடத் தமிழ் பேராசிரியர் கூட்டமைப்பு அமைப்பாளர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 6 மாதங்களாக தமிழகம் சமூக நீதியை முன்னெடுக்கும் மாநிலமாக திகழ்ந்து வருகின்றது.
தீபாவளி பண்டிகையின் போது, இருளர் இன மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், அரசின் சார்பில் வீட்டுமனை பட்டா உள்பட அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கி அம்மக்களின் வாழ்க்கைக்கு தன்னம்பிக்கையை தந்துள்ள தமிழக முதல்வருக்கு கூட்டமைப்பு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தவிர, தமிழகத்தில் சொற்ப எண்ணிக்கையில் வாழும் ஆங்கிலோ இந்தியர்களுக்கு வழங்கப்படும் சட்டமன்ற நியமன பிரதிநிதித்துவம் போல பல்வேறு விழிம்பு நிலை மக்களுக்கும் நியமன உறுப்பினர்கள் வாய்ப்பு வழங்க தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/