ஈரோடு நவ 20:

தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தி.மு.க., அரசு பதவியேற்ற 6 மாதத்தில் மட்டும் 6 லட்சம் காப்பீடு அட்டைகள் புதியதாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டமானது ஏழை, எளிய குடும்பங்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு கீழ் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் ஆண்டு ஒன்றிற்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 6 அரசு மருத்துவமனைகள், ஒரு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் 46 தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 6 மாதங்களில மட்டும் ஈரோடு மாவட்டத்தில் 6 லட்சத்து 34 ஆயிரத்து 992 காப்பீட்டு அட்டைகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 3 ஆயிரத்து 992 நபர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளனர். 16 ஆயிரத்து 421 நபர்கள் தனியார் மருத்துவமனைகளில் பல்வேறு நோய்கான சிகிச்சைகள் பெற்றதற்கு ரூ.52 கோடி தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.tngmssh.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/