ஈரோடு அக்.22:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே டி.என்.பாளையம் யூனியன் கணக்கம்பாளையம் பஞ்சாயத்து சுண்டகரடு கிராம பகுதியில் செய்தி–மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கம் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது.தமிழக முதல்வர் ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்ட திட்டங்கள், திட்டப்பணிகள் ஆய்வு, புதிய திட்டப்பணிகள் குறித்த தகவல்கள் மற்றும் பல்வேறு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர் மூலம் துவக்கி வைக்கப்பட்ட திட்டங்கள், வளர்ச்சி பணிகள் ஆய்வு போன்றவை குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றனர்.
அரசின் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அரசின் திட்டங்கள், முதல்வரின் ஆய்வுகள், கொரோனா குறித்த விழப்புணர்வு குறும்படங்கள் வெளியிடப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். https://www.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/