ஈரோடு நவ 10:

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள கோபி மற்றும் ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பாண்டிற்கான விண்ணப்பதாரர்கள் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் டெக்ஸ்டைல் வெட் ப்ராசசிங் டெக்னீசியன் மற்றும் மெஸினிஸ்ட் தொழிற்பிரிவிலும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வெல்டர் தொழிற்பிரிவிலும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை மூலம் சேர்ந்து பயிலலாம்.

மாணவர்களுக்கு 14 வயது முதல் 40 வயது வரையும், மாணவிகளுக்கு வயது வரம்பு கிடையாது. பயிற்சியில் சேரும் மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா பயிற்சியுடன் தமிழக அரசால் மாதம் ரூ.750 உதவித் தொகை, விலையில்லா பாடபுத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, வரைபடக் கருவிகள், தையற்கூலியுடன் இரண்டு செட் சீருடை, காலணி மற்றும் பஸ்பாஸ் ஆகிய சலுகைகள் வழங்கப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். https://www.skilltraining.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/