ஈரோடு அக் 7:

பவானிசாகர் யூனியன் தேசிபாளையம் பஞ்சாயத்து புங்கம்பள்ளியில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில், அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது.இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். முதல்வர் ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்ட திட்டப்பணிகள், பிற துறை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர் மூலம் துவங்கப்பட்ட திட்டப்பணிகள், நிகழ்ச்சிகள், அரசு விழாக்கள் போன்றவை குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றன.அரசின் திட்டங்கள், அதற்கான பயனாளி தகுதிகள், அணுக வேண்டிய அலுவலகம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை போன்றவை குறித்த புகைப்படங்கள், விளக்க குறிப்புகள் இடம் பெற்றன. 1500க்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டனர்.பின், அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம், அரசின் திட்டம், சாதனைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறும்படமாக காண்பிக்கப்பட்டது.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/