ஈரோடு சூலை 19:

தேர்தல் அறிக்கையில் கூறியபடி அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட மைய கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ராஜசேகர், கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் செந்தாமலர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநிலத் தலைவர் தமிழ்செல்வி கோரிக்கை விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய பென்ஷன் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு அறித்தது போல மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கிட வேண்டும், அனைத்து துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது. முடிவில் மாவட்ட செயலாளர் வெங்கிடு நன்றி கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today