ஈரோடு டிச 4:

ஈரோடு மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க வீட்டை விட்டு வெளியே வரும் பொது மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் ஒரு சிலர் முககவசம் அணியாமல் வருவதை காண முடிகிறது.

இந்நிலையில் நேற்றிரவு ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பவானி நோக்கி அரசு டவுன் பஸ் கிளம்பியது. பஸ்சில் பலர் ஏறினர். அப்போது ஒரு பெண் பயணி முக கவசம் அணியாமல் அந்த பஸ்சில் ஏறி சீட்டில் அமர்ந்தார். அந்த சீட்டில் முகக்கவசம் அணிந்து இருந்த மற்றொரு பெண் பயணி ஒருவர், அந்தப் பெண்ணிடம் முககவசம் அணியுங்கள் என்று கூறினார். அதற்கு அந்த பெண் தன்னால் முகக்கவசம் அணிய முடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பஸ் கண்டக்டரும் அந்த பெண்ணிடம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்தப் பெண் முககவசம் அணிய முடியாது என்று கூறினார். திடீரென அந்த இரண்டு பெண் பயணிகள் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். நேரம் செல்ல செல்ல வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் தாக்கும் சூழ்நிலை உருவானது. அப்போது பஸ் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தது.

பஸ் கண்டக்டர் இரு பெண் பயணிகளையும் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து பஸ் நிறுத்தப்பட்டது. பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் கீழே இறங்கிவிட்டனர். தொடர்ந்து அந்த  இரண்டு பெண் பயணிகளும் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  சமாதானம் செய்து வைத்து அவர்களுக்கு அறிவுரை கூறினர். இதனைத் தொடர்ந்து சுமார் அரை மணி நேரம் தாமதமாக பஸ் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.  https://www.tnstc.in 

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/