ஈரோடு டிச 20:

மொடக்குறிச்சி ஒன்றியம் விளக்கேத்தி ஊராட்சிக்கு உட்பட்ட விஜயநகர் பகுதியில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த புதிய திட்டப்பணிகள், வளர்ச்சி பணிகள், ஆய்வு, பிற மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ,க்களின் ஆய்வுப்பணிகள், திட்டப்பணிகள், கொரோனா பரவல் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகள் தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றன.

மக்களுக்கான திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன. பின், அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் அரசின் திட்டங்கள், நசாதனை, கொரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு விழிப்புணர்வு வீடியோ காட்சிகள் பொதுமக்களுக்கு திரையிடப்பட்டது. ஏராளமான மக்கள் பார்வையிட்டனர். https://www.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today