சேர்க்கைதாளவாடி டிச 8:

ஈரோடு மாவட்டம் கோபி கூட்டுறவு சரகத்திற்கு உட்பட்ட தாளவாடி மலை பகுதியில் தலமலை, கோடிபுரம் மற்றும் அருள்வாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடி இனத்தினர் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தும் பொருட்டு நேரடியாக அவர்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

கோபி சரக துணைப்பதிவாளர் ப.கந்தராஜா தலைமை வகித்து கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்வதனால் கிடைக்கும் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். அங்குள்ள மக்களிடம் கூட்டுறவில் இணைவதால் கிடைக்கும் திட்ட பலன், சேமிப்பு, கடன் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கினார். கூட்டுறவு சார் பதிவாளர் சுரேஷ் உடனிருந்தார். https://www.tncu.tn.gov.in 

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/