கோபி நவ 13:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பாரதி வீதி குப்பை கிடங்கில் தொடர்மழை காரணமாக துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கப்பட்டத்தை தொடர்ந்து,  குப்பைகளை அகற்றி அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு அனுப்பும் பணிகளை முன்னாள் அமைச்சரும் கோபி சட்ட மன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை பாரதி நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் நகராட்சி நிர்வாகம் சேகரித்து வந்தது. இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக  குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கோபி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சிக்கு  கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் இன்று பாரதி வீதியில் உள்ள குப்பை கிடங்கை நேரில் சென்று பார்வையிட்ட முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து லாரி மூலம் குப்பைகளை சிமெண்ட் ஆலை அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. https://www.ariyalur.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/