ஈரோடு அக் 2:
மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது படத்திற்கும், சிலைக்கும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைப்போல் காமராஜர் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது படத்திற்கும், சிலைக்கும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக கருங்கல்பாளையம் காந்தி சிலைக்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சேவா தளம் தலைவர் முகமது யூசுப், மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், திருச்செல்வம், ஜாபர் சாதிக், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் சுரேஷ், ஈரோடு மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, பாட்சா, மாவட்டத் துணை தலைவர்களான புனிதன், முன்னாள் துணை மேயர் பாபு என்கிற வெங்கடாஜலம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கண்ணப்பன், அரவிந்தராஜ், கனகராஜ். முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் கண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதைத் தொடர்ந்து ஈரோடு ஜி.ஹெச். ரவுண்டானாவில் உள்ள காமராஜர் உருவச் சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காந்தி படம், காமராஜர் படங்களுக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், வட்டாரத் தலைவர்கள் மொடக்குறிச்சி தெற்கு ஈஸ்வரமூர்த்தி, மொடக்குறிச்சி வடக்கு ரவி, மாவட்ட செயலாளர் பூவை ராஜன், இளைஞர் காங்கிரஸ் தளபதி ரமேஷ், மனித உரிமைகள் துறை மகேந்திரன், சிறுபான்மை பிரிவு ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/