ஈரோடு மே 29: ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள கிருஷ்ணம்பாளையம் சாலை, திருநகர் காலனி பகுதியில் உயர் மின்னழுத்த மின் கம்பிகள் செல்கிறது.மாலை நேரங்களில் இங்குள்ள சிறுவர்கள் பட்டம் விடும்போது, அவை மின் கம்பிகளில் அறுந்து விழுகிறது. இதனால் மின் கம்பிகள் அறுந்து விடுகின்றன. அடிக்கடியும், நீண்ட நேரமும் மின் தடை ஏற்படுகிறது. இதுபோன்ற நிலையில், தங்கு தடையின்றி மின்சாரம் மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டி உள்ளதாலும், நோயாளிகளின் உயிர் காக்கும் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய, தடையில்லா மின்சாரம் தேவைப்படுகிறது.எனவே, அப்பகுதியினர் பட்டம் விடுவதை தவிர்த்து, மின் கம்பிகள் சேதமடைவதையும், மின் தடை ஏற்படுவதையும் தவிர்க்கும்படி, மின்வாரிய செயற்பொறியாளர் சொ.ராமசந்திரன் கேட்டுக் கொண்டார்.

நிருபர்.
ஈரோடு டுடே