ஈரோடு ஆக 5:

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக காகிதப்பை மற்றும் பைல் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் வருகின்ற 9ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சி முகாமில், ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களை சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், அல்லது 100 நாள் வேலை திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஈரோடு 2 என்ற முகவரியிலும், 8778323213, 7200650604 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கனரா வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today