ஈரோடு ஆக 12:

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் காளான் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி வருகின்ற 16ம் தேதி முதல் 27ம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சி, சீருடை, உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 100 நாள் வேலை திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகம், 2ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஈரோடு – 638 002, என்ற முகவரியில் பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today