ஈரோடு டிச 4:

இலவச வீட்டுமனை பட்டா விபரங்கள் ஆன்லைனில் பதிவேற்றும் பணி ஈரோடு மாவட்டத்தில் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தங்களது பட்டா, சிட்டா உள்ளிட்ட விபரங்களை தமிழக அரசின் மின்ணனு சேவையான தமிழ் நிலம் இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்களது நிலம் மற்றும் வீடு பற்றிய பட்டா, சிட்டா மற்றும் அபதிவேடு உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

இதே போல அரசின் புறம்போக்கு நில விபரம், நகர நில அளவை பதிவேடு உள்ளிட்டவைகளும் பார்வையிட முடியும். தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசின் வருவாய்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட இலவச பட்டா விபரங்கள் அந்தந்த வருவாய் கிராம அளவில் பராமரிக்கப்படும் பதிவேடுகளில் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

இதனால் ஆன்லைன் மூலம் எந்த தகவலும் பயனாளிகளால் பெற முடியாத நிலை உள்ளது. எனவே அரசின் சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா விபரங்கள், பயனாளிகள் விபரம், ஆதார் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணியானது கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றது.

சட்டமன்ற தேர்தல், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தாமதமடைந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஆன்லைனில் பட்டா விபரங்கள் பதிவேற்றும் பணியானது 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பணி முழுமையாக நிறைவடைந்தால் போலி பயனாளிகள் உருவாவது முற்றிலும் தடுக்கப்படும் என்றும், மாவட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மொத்த பயனாளிகள் எண்ணிக்கை, அரசின் சார்பில் வழங்கப்பட்ட மொத்த நிலம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை எளிதில் தெரிந்து கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  https://www.tn.gov.in 

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/