ஈரோடு டிச 8:

ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் அரசாணையை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கிராம ஊராட்சிகளில் அரசாணை 385ன்படி சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி 60 வயது நிரம்பி பணி ஓய்வு பெற்றுள்ள தூய்மை பணியாளர்களுக்கு அரசாணையின் படி தொகுதிப்பூதிய தொகையாக ரூ.50 ஆயிரம் மற்றும் ஓய்வூதியம் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட வேண்டும்.

கடந்த 2017ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்ட போதிலும், ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. ஒரு சில பணியாளர்களுக்கு பணி ஓய்வு உத்தரவு கூட ஊராட்சி நிர்வாகங்களால் வழங்கப்படாமல் உள்ளது. ஊராட்சி நிதியில் இருந்து வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியத்தொகையினை முறையாக வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய ஓய்வூதியத்தொகையினை முறையாக வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  https://www.tn.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/