ஈரோடு சூன் 29: ஈரோடு பிரப் ரோடு, பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, திண்டல் பகுதியில் உள்ள ஓட்டல்களில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் தங்க விக்னேஸ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஊரடங்கு நிலையில் பார்சல் மூலம் மட்டுமே உணவு வழங்க வேண்டும் . ஓட்டலில் அமர்ந்து உணவு உண்ண அனுமதி இல்லை.
அத்துடன் பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பேப்பர் களில் உணவு பொருளை வழங்கக் கூடாது. பொதுமக்கள் கொண்டு வரும் பாத்திரங்களை வெந்நீர் ஊற்றி சுத்தம் செய்தி அவற்றில் உணவு வழங்கலாம் அல்லது வாழை இலையில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்வால் கடந்த திங்கள் முதல் ஓட்டல்கள் கூடுதல் நேரம் செயல்படு வதுடன் வெரைட்டி உணவுகளை விற்க துவங்கி உள்ளனர்.
தளர்வுகள் மூலம் அனைத்து தரப்பு கடைகள் திறப்பால், ஓட்டல்களில் தரமான உணவு வாங்குவதை உறுதிப்படுத்த மாவட்ட உணவு பாதுகப்பு அலுவலர் குழு சோதனை தொடர்ந்தனர். நேற்று சைவ, அசைவ உணவகங்கள், பார்ஸ்ட் புட் கடைகளில் உணவின் தரம், பழைய உணவு, சாம்பார், சட்னி, குருமா, அசைவ உணவுகள் குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளனரா என ஆய்வு செய்தனர்.
அவ்வாறான உணவு பொருள், சமைக்காமல் கவர்களில் வைத்திருந்த கோழி, ஆட்டுக்கறி, மசாலா பசைகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இரண்டு ஓட்டலுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி , உணவு தர மாதிரிகள் எடுத்து சென்றனர். தரமான உணவு வழங்க உத்தரவிட்டனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே